மானம் காத்த மணிஷ் பாண்டே; நியூசிலாந்து அணிக்கு எளிய இலக்கு !!

மானம் காத்த மணிஷ் பாண்டே; நியூசிலாந்து அணிக்கு எளிய இலக்கு

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

மானம் காத்த மணிஷ் பாண்டே; நியூசிலாந்து அணிக்கு எளிய இலக்கு !!

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில், மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

வெலிங்டனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மணிஷ் பாண்டே (50*), ராகுல் (39), சிவம் துபே (12), சைனி (11) மற்றும் விராட் கோஹ்லி (11) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக இஷ் சோதி 3 விக்கெட்டுகளையும், பென்னட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.