தல தோனி மரண மாஸ் போராட்டம்! கடைசி ஓவரில் சென்னை த்ரில் வெற்றி! ட்விட்டரி ரியாக்சன்

ஐபிஎல்-இல் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். அதிரடியான தொடக்கத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கியது இவர்களது ஆட்டத்தில் தெரிந்தது.

சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே பட்லர் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து மிரட்டினார். சான்ட்னர் வீசிய 2-ஆவது ஓவரில் ரஹானே அடுத்தடுத்த பந்தில் பவுண்டரி அடித்து மிரட்டினார். மேலும், அந்த ஓவரில் வைட் மூலம் ஒரு பவுண்டரி கிடைத்தது. இதனால், முதல் 2 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 25 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 3-ஆவது ஓவரில் அதிரடியாக விளையாட நினைத்த ரஹானே அந்த ஓவரில் 2-ஆவது பவுண்டரி அடிக்க முயன்று எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஷர்துல் தாகூர் பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வந்த வேகத்தில் முதல் 3 பந்தில் பவுண்டரிகளை வழங்கினார். ஆனால், 4-ஆவது பந்தில் பட்லரை வீழ்த்தினார் தாகூர். அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணி சற்று நெருக்கடிக்குள்ளானது.

ஆனால், இதில் இருந்து மீண்டு வருவதற்குள் சாம்சன், டிரிபாதியை இழந்தது ராஜஸ்தான். நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித்தும் 22 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அறிமுக வீரராக களமிறங்கிய ரியன் பராக் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் சீரான இடைவெளிகளில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து சொதப்பல் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால், அந்த அணியின் ரன் வேகம் முற்றிலுமாக குறைந்தது.

இறுதியில் நல்ல ஃபினிஷிங் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பென் ஸ்டோக்ஸ் இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் அவர் இந்த போட்டியிலும் துரிதமாக ரன் சேர்க்க திணறினார். இதன்மூலம், அவர் 1 பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் 28 ரன்களுக்கு போல்டானார்.

அதன்பிறகு, அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபால் கடைசி கட்டத்தில் பவுண்டரிகளும், சிக்ஸரும் அடிக்க ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து  151 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் மட்டும் ஷர்துல் தாகூர் 18 ரன்களை வாரி வழங்கினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ஆர்ச்சர் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

Sathish Kumar:

This website uses cookies.