12-வது ஐபில் போட்டிகள் துவங்க போகின்றன. 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் சென்னையில் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இம்முறை மக்களவை தேர்தலைக்கூட கண்டுகொள்ளாமல் நடக்க இருக்கிறது. துவக்கப் போட்டியும், இறுதிப் போட்டியும் சேப்பாக்கத்திற்கே கிடைத்திருக்கிறது.
பயிற்சி ஆட்டத்தின் பொது ஒரு ரசிகர் மைதானத்தின் உள்ளே புகுந்து தோணியுடன் கை குலுக்கி சென்றார் இது போன்ற நிகழ்வுகளும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக உள்ளனர்.தற்பொழுது நடக்கவுள்ள போட்டிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தற்பொழுது இரு அணிகளுக்கிடையில் டாஸ் போடப்பட்டது அதில் டோனி தலைமையிலான சென்னை அணி டாஸ் வென்றது.இதில் சென்னை அணி பீல்டிங்கை தேர்தெடுத்து.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் மற்றும் ட்வையின் ப்ராவோ உள்ளிட்ட மூன்று வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பெங்களூரூ அணியில் மோயின் அலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், சிம்ரன் ஹெர்ட்மேயர், காலின் டி க்ராண்ட்ஹோம் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கினர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணியில் விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சென்னையில் அணியில் இரண்டாவது ஓவரையே ஹர்பஜன் சிங் வீசினார். அசத்தலாக பந்துவீசிய அவர் அடுத்தடுத்து விக்கெட்களை அள்ளினார். கேப்டன் விராட் கோலி 6, ஏபி டிவில்லியர்ஸ் 9, மொயின் அலி 9 என முதல் 3 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தார்.
அதேபோல், ரன்களை குறைவாக கொடுத்தார். அவரை தொடர்ந்து ஜடேஜாவும் தன் பங்கிற்கு கிராண்ஹோமை ஆட்டமிழக்க செய்தார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிரும் அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்களை சாய்த்தார். பெங்களூர் அணி 59 ரன்னிற்குள் 9 விக்கெட்களை இழந்துவிட்டது. அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 14 ஓவர்கள் முடிவில் 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பின்னர் 17.1 ஓவர்களுக்கு 70 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.