ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பந்துவீசுகிறது.
ஐபிஎல் போட்டியின் 25வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானம் செய்துள்ளார். கடந்த போட்டியைப் போன்று விக்கெட்டுகளை அதிகம் கைப்பற்றும் நோக்கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இந்தப் போட்டி நடைபெறுவதால், ராஜஸ்தான் அணி வலுவுடன் இருக்கும் எனப்படுகிறது. கடந்த முறை ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னையில் அணியில் கேப்டன் தோனி அதிகபட்சம் 75 ரன்கள் குவித்திருந்தார். அந்தப் போட்டி சென்னையில் நடைபெற்றது. ஆனால், இன்றைய போட்டி ராஜஸ்தானில் நடைபெறுவதால் சென்னை மீண்டும் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-
1. ரகானே, 2. ஜோஸ் பட்லர், 3. ஸ்மித், 4. திரிபாதி, 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜாப்ரா ஆர்சர், 7. குல்கர்னி, 8. கோபால், 9. உனத்கட், 10. சஞ்சு சாம்சன், 11. ரியான் பராக்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-
1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. டோனி, 5. கேதர் ஜாதவ், 6. அம்பதி ராயுடு, 7. ஜடேஜா, 8. இம்ரான் தாஹிர், 9. தீபக் சாஹர், 10. சான்ட்னெர், 11. சர்துல் தாகூர்.
சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங், ஸ்காட் குக்லெய்னுக்கு பதிலாக சான்டனர், ஷர்துல் தாகூர் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளை பெறும் முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி பெறுவார்.