12 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடக்கும் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது.
இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கிறிஸ் கெயிலின் ரெகார்டு பலமாகவுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூர் மைதானத்திற்கு அடுத்தப்படியாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில்தான் அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா மைதானத்தில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 540 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 80 சதவிகித ரன்கள் பவுண்டரிகள் மூலம் குவித்துள்ளார். அத்துடன் இந்த 11 போட்டிகளில் 7 முறை 30 ரன்கள் மேல் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் உள்ளடங்கும்.
அதேபோல, கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு இதுவரை 12 போட்டிகளில் களமிறங்கியுள்ள கெயில் ஒவ்வொரு 2 இன்னிங்ஸ்சிக்கு ஒரு இன்னிங்சில் அரைசதம் கடந்துவருகிறார். ஏற்கெனவே திங்கட்கிழமை நடைபெற்ற ராஜஸ்தானிற்கு எதிரான போட்டியில் கெயில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உதவியுடன் 48 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அந்தப் போட்டியில் அவர் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்தப் போட்டியிலும் அவரது ஆட்டம் தொடர்ந்தால் கிற்ஸ் கெய்ல் சூறாவெளி புயல் ரசிகர்களை பெரு மகிழ்ச்சி வெள்ளத்தில் தவிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.வ
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கிறிஸ் லின், 2. சுனில் நரைன், 3. உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. ஷுப்மான் கில், 6. தினேஷ் கார்த்திக், 7 ரஸல், 8 பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. கிருஷ்ணா, 11. பெர்குசன்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கிறிஸ் கெய்ல், 2. கேஎல் ராகுல், 3. மயாங்க் அகர்வால், 4. சர்பிராஸ் அகமது, 5. டேவிட் மில்லர், 6. மந்தீப் சிங், 7. அண்ட்ரிவ் டை, 8. அஸ்வின், 9. முகமது ஷமி, 10. ஹார்டஸ் வில்ஜோன், 11. வருண் சக்கரவர்த்தி.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிஸ்டரி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பிடித்துள்ளார்.இவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டியாகும்.