ஐபிஎல் 2019-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. பார்தீவ் பட்டேல், 2 விராட் கோலி, 3. டி வில்லியர்ஸ், 4. ஹெட்மையர், 5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. அக்ஷ்தீப் நாத், 7. உமேஷ் யாதவ், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. முகமது சிராஜ், 11. மொயீன் அலி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-
1. ரகானே, 2. பட்லர், 3. ராகுல் திரிபாதி, 4. ஸ்மித், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஸ்டூவர்ட் பின்னி, 7. கவுதம், 8. ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. தவால் குல்கர்னி, 11. வருண் ஆரோன்
இன்று இரு அணிகளும் முதல் வெற்றிக்காக விளையாடி வருகின்றன. ஆர்சிபி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 70 ரன்னில் சுருண்டது. இந்த போட்டியில் விராட் கோலி – பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் – மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 231 ரன்னை சேஸிங் செய்ய பார்தீவ் பட்டேல் – ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் – விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.தங்கள் வழியில் வெற்றியை தொடங்கி, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே கடந்த மூன்று போட்டிகளும் தோற்று, ஐபிஎல் தரவரிசை பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் பரிதாபமாக உள்ளன. எனவே இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.
இந்தப் போட்டி தொடர்பாக பேசிய பெங்களூர் அணி கேப்டன் கோலி, “ஜெய்பூர் மைதனாம் நன்றாக இருக்கும். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரானது. நாங்கள் எங்கள் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினோமே அதேபோன்று ஒரு ஆட்டத்தை தான் விளையாடப்போகிறோம். இனியும் நாங்கள் ஆனந்தமாக செல்ல வேண்டுமென்றால், அடிப்படையான விஷயங்களை செய்ய வேண்டும். எங்கள் வழியில் முடிவை பெறுவதுடன், இந்தத் தொடரின் வெற்றியை தொடங்க வேண்டும். அடுத்த போட்டி கண்டிப்பாக எங்களுக்கான போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.