இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த ஆஸ்திரேலியா; ட்விட்டர் ரியாக்சன் !!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி முழுமையாக பறிகொடுத்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், இரண்டு போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஜார்கண்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா மற்றும் அந்த அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் ஆகியோர் துவக்க வீரராக களமிறங்கினர்.
இதில் உஸ்மான் கவாஜா 104 ரன்களும், ஆரோன் பின்ச் 93 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு அபாரமான துவக்கம் கொடுத்தனர். அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்களில் அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், ஆல் ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டோனிஸ் 31 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.