சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சீராக ரன்களை குவித்தனர். 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் பிருத்வி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 51 (47) ரன்களில் வெளியேறினார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ஆடுகளம் மந்தமாக இருந்தபோதிலும் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார். அவர் 13 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கோலின் இங்க்ரம், கீமோ பால் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், ஷிகர் தவானுக்கு அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி எழுந்தது. ஆனால், அரைசதம் அடித்த தவான் அதிரடியாக ரன் குவிக்க முயன்று 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 7 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது
அவருடன் விளையாடிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 (20) ரன்களிலும், கீப்பர் ரிஷாப் பண்ட் 25 (13) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கோலின் இங்ரம் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தவான், பண்ட் மற்றும் கோலின் ஆகிய மூன்று பேரின் விக்கெட்டையுமே பிராவோ வீழ்த்தி டெல்லி அணியை மிரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தவான் நிலைத்து நின்று ஆடினார். அவர் அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், சாஹர், தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தின