இந்தியா அயர்லாந்து 2வது டி20 போட்டியில் தோனியை வெளியில் அமர வைய்த்த கோலி, கொந்தளித்த ரசிகர்கள்

அயர்லாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் தோனி வெளியில் அமர்த்தப்பட்டு தினேஷ் கார்த்திக் உள்ளே கொண்டுவரப்பட்டார். இதனால் தோனி வெறியர்கள் ட்விட்டரில் கோவத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.

தொடரை கைப்பற்றிய இந்திய அணி 

இந்தியா அயர்லாந்து அணிகள் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வந்தது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தி வென்றது.

அணியில் மாற்றம் 

முதல் போட்டியில் சிறப்பாக ஆடி தவான் 74 ரன்கள் அடித்தார். இரண்டாவது போட்டியில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இவருக்கு பதிலாக கே எல் ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். இதை பயன்படுத்திக்கொண்ட ராகுல் 36 பந்துகளில் 70 குவித்தார்.

பும்ரா விற்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டார். இது இவருக்கு அறிமுக போட்டியாகும். மேலும், புவனேஸ்வர் குமார் க்கு பதிலாக நீண்ட இடைவேளைக்கு உமேஷ் யாதவ் அணியில் இணைந்தார். இவர் 65 போட்டிகளை  தவற விட்டு அணியில் இணைந்தார்.

மிகப்பெரிய மாற்றம் 

முதல் போட்டியில் கீப்பிங் செய்த தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 56 போட்டிகளை தவறவிட்டு மீண்டும் அணியில் இணைந்தார்.

90 டி20 போட்டிகளில் ஆடியுள்ள தோனி இதுவரை பிசிசிஐ நிர்வாகம் ஓய்வு அளிக்கபட்ட பொது மட்டுமே அணியில் இடம்பெறாமல் இருந்திருக்கிறார். அணியில் இடம்பெற்று வெளியில் அமர்த்தப்பட்டது இதுவே முதல் முறை.

தோனி ரசிகர்கள் ட்விட்டரில் கொந்தளிப்பு 

இதனை பொறுத்துக்க முடியாமல் ட்விட்டரில் பிளேயிங் லெவேன் அறிவித்த நொடியில் இருந்தே தோனி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் சில ட்வீட்கள் கீழே:

Vignesh G:

This website uses cookies.