ட்விட்டரில் ஷேன் வார்னேவையே ஸ்பின் சம்பந்தமான ஒரு கேள்வி மூலம் திக்குமுக்காட வைத்த ரசிகர் !!!

நேற்றைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து இருந்தது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஷேன் வார்னே தனது ட்விட்டர் வலைதளத்தில் இந்திய அணி 2 ஸ்பின் பந்து வீச்சாளர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

எதிர்முனையில் நியூசிலாந்து அணியில் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் கூட இல்லை. எனவே இந்திய அணி 300 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அது மிகப் பெரிய ஸ்கோர் ஆக கருதப்படும். மைதானம் சற்று வறண்டு காணப்படுகிறது, எனவே இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களை மிக எளிதாக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஷேன் வார்னே கூறிய இந்த கருத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் தன்னுடைய கருத்தை கமெண்ட் செய்திருந்தார். அவருடைய கமெண்ட் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தற்போது வைரலாகி வருகிறது.

ஒரே கேள்வி மூலம் ஷேன் வார்னேவை திக்குமுக்காட வைத்த ரசிகர்

இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இந்த மைதானம் அமையப் போகிறது என்று ஷேன் வார்னே கூறிய நிலையில், ரசிகர் ஒருவர் இந்த மைதானத்தில் எப்படி ஸ்பின் பந்து வீச்சாளர்கள் மிக அற்புதமாக செயல்பட்டு நிறைய விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் அவர், இந்த ஆட்டத்தில் அவ்வப்போது மழை வந்து போகிற பட்சத்தில் மைதானம் வறண்டு போக வாய்ப்பே கிடையாது என்றும், எனவே ஸ்பின் பந்துவீச்சாளர்களை வைத்து போட்டியை வென்று விடலாம் என நினைப்பது தவறான முடிவு என்றும் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

ட்விட்டர் வலைத்தளத்தில் வைரலாக அந்த ரசிகரது பதிவு

இந்நிலையில் டுவிட்டர் வலைத்தளத்தில் மற்ற ரசிகர்கள் அனைவரும் ஸ்பின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ஜாம்பவானாக பார்க்கப்படும் ஷேன் வார்னேவுக்கு ஸ்பின் சம்பந்தமாக கருத்து கூறுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

அதில் ஒரு ரசிகர், இது பார்க்க எப்படி இருக்கிறது என்றால் பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு எப்படி பாட வேண்டும் என்று கூறுவது போல் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் நிறைய ரசிகர்கள் இதேபோல் நகைச்சுவையாக, அந்த ரசிகரது பதிவை மேற்கோள் காட்டி தங்களது கமெண்ட்டுகளை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.