இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான வங்கப்புலி கங்குலி: ட்விட்டர் வாசிகள் சிலாகிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.

Kolkata: Former Indian cricket captain and Cricket Association of Bengal (CAB) president Sourav Ganguly addresses budding cricketers during the inauguration of the Calcutta Police Surgeants’ Institute cricket academy in Kolkata on Friday. PTI Photo(PTI11_24_2017_000094A)

இது குறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

“போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய அமைப்பாக இருப்பதால் பொறுப்பு இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இந்தியா ஒரு கிரிக்கெட் அதிகார மையமாக இருக்கிறது, எனவே இது ஒரு சவாலாக இருக்கும்.”

நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைமை தாங்குவது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை துடைக்க இந்த நேரத்தில் ஏதாவது செய்ய எனக்கு கிடைத்து இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. நல்ல நிலையில் இல்லாத நேரத்தில் நான் பொறுப்பேற்கிறேன்.

நான் எந்த ஒரு முடிவை எடுக்கும்போதும் முதலில் எல்லோரிடமும் கலந்து பேசுவேன். ஆனால் முதல் தர கிரிக்கெட் வீரர்களைக் கவனிப்பதே எனது மிகப்பெரிய முன்னுரிமை ஆகும். கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்திருந்தேன். அவர்கள் கேட்கவில்லை என கூறினார்.

 

இதற்கிடையே பிசிசிஐ அமைப்பின் செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், பொருளாளர் பதவிக்கு நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோரதரர் அருண் துமாலும் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sathish Kumar:

This website uses cookies.