சச்சினின் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் வித்யாசமாக வாழ்த்து மழை பொழிந்த ரசிகர்கள்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2013 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ஓய்வு பெற்றாலும் அவருடைய ரசிகர்கள் சச்சினின் மறக்க முடியாத ஆட்டங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்தும், நினைவுக் கூறியும் வருகின்றனர்.

அப்படித்தான் ஏப்ரல் 24 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சச்சினின் பிறந்தநாளை சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏறக்குறைய 24 ஆண்டுகள் சச்சின், இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இதில் பல இன்னிங்ஸ் மறக்க முடியாதது. பொதுவாக அதில் எப்போதும் இடம்பெறுவது சச்சின் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ருத்ர தாண்டவும். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான இன்னிங்ஸ்களை சச்சின் விளையாடியுள்ளார்.

அதில் ரசிகர்களின் கவனத்தை அதிகம் இடம்பெறாதது, 2008 இல் மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்பு அடுத்த வாரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட். சச்சினின் வாழ்வில் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடுமே, அத்தகைய தருணத்தில் சச்சினின் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தது.

அதைவிட முக்கியம், அந்தப் போட்டி முடிந்த பின்பு சச்சின் அளித்த பேட்டி. சச்சினின் 47 ஆவது பிறந்தநாளான இன்று அன்றைய போட்டியைச் சற்றே பின்னோக்கி பார்க்கலாம். 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. அப்போது மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி சொந்த நாட்டுக்குத் திரும்பியது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, பலத்த பாதுகாப்போடு சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்று அடுத்து சில வாரங்களிலேயே இந்தப் போட்டி நடைபெற்றதால், ஒட்டுமொத்த உலகமும் சென்னை டெஸ்ட் நோக்கி திரும்பியது. அந்தாண்டுதான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் அடித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா 241 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

 

 

 

Sathish Kumar:

This website uses cookies.