வாழ்த்து மழையில் நனையும் யுக நாயகன் யுவராஜ் சிங்
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன் யுவராஜ் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் மிக அதிகமாக எதிர்பார்ப்புகளுக்கும் அதனாலே ஏமாற்றங்கள் கண்டனங்கள் விமர்சனங்களுக்கு உள்ளான சமகால வீரர் யுவ்ராஜ் தான். இன்று ரெய்னா, ரோஹித் ஷர்மா, மனோஜ் திவாரி, கோலி, சுவரப் திவாரி, மனிஷ் திவாரி என இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால பட்டியலில் நிறைந்துள்ள ஆர்ப்பாட்டமான அதிரடி ஆட்டமும், மீடியா தளுக்கும் மிக்க இளைய வீரர்களுக்கு ஒரு முன்னோடி அவர் தான்.யுவ்ராஜுக்கு முந்தின தலைமுறை ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஒற்றைபட்டையான திறன்கள் மற்றும் திட்டமிடல் சுயகட்டுப்பாடு ஆகிய விழுமியங்களை பிரதானப்படுத்தியது.
சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர் நிலைத்து ஆடுவதை, குறைவாக ஆபத்துகளை எதிர்கொள்வதில், வளமான சராசரியை தக்க வைப்பதில் கவனம் மிக்கவர்கள். அவர்களின் காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் கல்லும் முள்ளும் நிறைந்த மலையேற்றம் எனலாம். அவர்கள் அணியின் வீழ்ச்சிக்கு சரிவுக்கு எப்போதும் தயாராக இருந்தார்கள்.
மோசமாக தோற்காமல் இருப்பதே பிரதானம். பிறகு மெல்ல மெல்ல எதிரணிக்கு சமமாக போட்டியிட தமது அணிக்கு உதவினர். ஆனால் யுவ்ராஜின் தலைமுறை பின்வாங்குதலை, தற்பாதுகாப்பை, சுதாரிப்பை அறியாதது. யாரையும் அஞ்ச வேண்டியதில்லை, எதற்கும் தயங்க வேண்டியதில்லை என அவர்கள் முழங்கினர். தனித்தே தம்மால் வெற்றியை வாங்கித் தந்து படக்கருவிகளின் பிளாஷுக்கு முன்னால் பளிச் புன்னகை செய்து பேட்டி தருவதே சாதனை என்று கருதினர். ஓட்ட சராசரி அளவுக்கு மீடியாவில் கிடைக்கும் நல்ல பெயரும் பிரபலமும் முக்கியம் என்று அறிந்தனர்.
கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் மட்டும் ஆடுபவன் அல்ல, அவன் விளம்பர நாயகன், அபிப்ராயங்களை சதா முழங்குபவன், கேட்டாலும் கேட்காவிட்டாலும் தொடர்ந்து சவால்களை விடுப்பவன், யாரும் கவனிக்காமல் இருந்தாலும் யாரையாவது பரிகசித்து அவமானித்து கண்டித்து கவனத்தை பெறுபவன் என்று நிலைப்பாடு உருவானது.
இப்படியான பரிணாமத்துக்கு 2000இல் ஐ.சி.சி நாக் அவுட் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவ்ராஜ் தனது இரண்டாவது ஆட்டத்தில் அடித்த 84 ஒரு நல்ல உதாரணம்.
இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள யுவராஜ் சிங், இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அதில் சில;