ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் இருந்து புகைப்படங்களை நீக்கியதால் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், ஆர்சிபி அணி 2020 ஐபிஎல் போட்டிக்கான புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ளது.
புதிய லோகோ அறிமுகப்படுத்திய விழாவில், ஆர்சிபி அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா, “ புதிய பிராண்ட் அடையாளத்தை வடிவமைப்பதன் பின்னணியில் உள்ள யோசனை, எங்கள் சிங்கத்திற்கு ஒரு சமகால தயாரிப்பை வழங்க வேண்டும் என்பதே. லோகோவில் உள்ள விவரம் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்கவும் அவர்களோடு ஈடுபாடுடன் இருக்கவும் ஒரு உறுதிப்பாடாகும்.” என்றார்.
“திறம்பட வாழவும் சுவாசிக்கவும், கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கொண்டாடவும், தைரியமாக விளையாடுவதற்கும் கிளப்பின் அடையாளத்தில் மாற்றம் அவசியம் என்று நாங்கள் நம்பினோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
2008ம் ஆண்டு, ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரு போட்டியை கூட வெல்லாத ஆர்சிபி, தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, பெயரும் வெறும் ‘ராயல் சேலன்ஞர்ஸ்’ என்று மாற்றியுள்ளது.
இதேபோன்று ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் பக்கங்களுக்கும் செய்யப்பட்டது.
பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அணியின் கேப்டன் கோலி, “பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் கேப்டனான எனக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் @rcbtweets,” ட்விட் செய்தார்.
மாற்றத்தை பார்த்த ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னரான சாஹலும் அதிர்ச்சியடைந்துள்ளார். “ஆர்சிபி, உங்களுடைய படங்கள் மற்றும் பதிவுகள் எங்கு சென்றன?” என்று ட்விட் செய்துள்ளார்.
“@rcbtweets நம்முடைய சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்ன ஆச்சு? இது தற்காலிக இடைவேளை என்று நம்புகிறேன்” என்று டி வில்லியர்ஸ் பதிவிட்டார்.