ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணியில் விளையாடி கொண்டிருந்த விருத்திமான் சஹாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன் பின்னர் தனிமையில் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். சில நாட்களுக்கு பின்னர் அவர் தற்போது பூரண குணமடைந்து தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து கொண்டுவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
ஸ்டிரிக்ட்டாக நடக்காத ஐபிஎல் தொடர்
சென்ற ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடர் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது. அங்கே போட்டிகள் நடக்கும் நேரங்கள் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களில் கூட வெளி நபர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இங்கே பல நபர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் காரணமாகவே வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது குறித்துப் பேசியுள்ள சஹா
தனக்கு கொரோனா வந்தவுடன் லேசான காய்ச்சல் அடித்தது என்று கூறினார். அதன்பின்னர் மூன்று நாட்களில் தனக்கு எந்தவித நறுமணமும் தெரியவில்லை, அதன் பின்னர் ஒரு நான்கு நாட்கள் கழித்து மீண்டும் தனக்கு நறுமண உணர்வு வந்ததாக கூறினார்.
சில நாட்களுக்கு தனக்கு உடல் லேசான சோம்பல் போன்று இருந்தாலும் அவ்வளவு பெரிய வலியாக தெரியவில்லை என்று கூறினார். தலைவலி அவ்வளவு பெரிதாக தனக்கு ஏற்படவில்லை என்றும் கூறினார். திரைப்படங்களை பார்த்து தன்னம்பிக்கையுடன் இருந்ததாகவும் கூறினார். மேலும் குடும்பத்தார் இருக்கையில் தான் எதை பற்றியும் சிந்திக்கவில்லை, அதன் காரணமாகவே தன்னால் அதிலிருந்து எளிதில் மீண்டு வர முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
தற்பொழுது முழுவதுமாக பூரண உடல் நலத்துடன் இருக்கும் சஹா தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழித்து கொண்டு வருகிறார். நியூசிலாந்துக்கு எதிராக வும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் நடக்க இருக்க டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாட தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.