அதிர்ச்சி செய்தி : 2015 உலகக்கோப்பையின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பிக்சிங்… பதற வைக்கும் அதிரடி வீரர்
2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இந்த தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதிர்ச்சி செய்தி என்னவென்றால், இந்த தொடரின் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் தனக்கு பிக்சிங் அழைப்புகள் வந்ததாக பாகிஸ்தான் அதிரடி வீரர் உமர் அக்மல் கூறி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளார்.
2015ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டு பந்துகள் மட்டும் விடுவதற்கு தனக்கு 2லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக பேசினர்.
என கூறி கிரிக்கெட் உலகை பதற வைத்துள்ளார் உமர் அக்மல்.
மேலும், எனக்கு பாகிஸ்தான் தான் முக்கியம். இதனால் இனிமேல் என்னிடம் இப்படி போன் செய்து பேசாதீர்கள் என அவர்களை எச்சரித்தாகவும் கூறியுள்ளார் உமர் அக்மல். இது ரன்னுக்கு புதிதல்ல இதற்கு முன்னரே பல முறை இது போன்ற பலர் வந்து பேசியுள்ளனர் அதனால் அந்த நபர்களை எளிதாக எதிர் கொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.
இந்த போட்டியில் உமர் அக்மல் 4 பந்துகள் எதிர்கொண்டு டக் அவ்ட் ஆனார் என்பதும் நம்மை புருவத்தை உயர்த்த வைக்கிறது. இறுதியில் விராட் கோலி 107, சிகர் தவான் 74, சுரேஷ் ரெய்னா 73 ரன் குவிக்க இந்திய அணி 76 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வீரர்கள் பிக்சிங் செய்வதில் பெயர் போனவர்கள். பாகிஸ்தானில் இருந்து அதிகப்படியான வீரர்கள் பிக்சிங் செய்து தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.