விதியை மீறி பந்தில் எச்சிலை தடவிய இங்கிலாந்து வீரர்! உடனடியாக பார்த்த நடுவர்! தண்டனை என்ன?
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 117 நாட்கள் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் இருந்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாட படாமல் இருந்த காலகட்டம் இதுதான் .
இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் ஒரு விதி மீறல் நடைபெற்றிருக்கிறது .
இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான டோமினிக் ஷிப்லி பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது டோமினிக் பெஸ் பந்து வீசிக் கொண்டிருந்தார் பந்து பீல்டிங் செய்து கொண்டிருந்த டோமினிக் ஷிப்லியின் கைக்கு வந்தது. தெரியாத்தனமாக பந்தில் எச்சில் வைத்து தடவினார் டோமினிக் ஷிப்லி.
இதனை உடனடியாக ஒப்புக் கொண்டு நடுவரிடம் சென்று அவரே கூறிவிட்டார். இதன் காரணமாக களத்திலிருந்து நடுவர்கள் தங்களது பாக்கெட்டில் வைத்திருந்த கிருமிநாசினி துணியை எடுத்து அதை நன்றாக தேய்த்து சுத்தம் செய்தனர்.
அதன் பின்னர் மீண்டும் பந்துவீச்சாளர்கள் பந்து வீச்சாளர் இடம் கொடுக்கப்பட்டு பந்து வீசப்பட்டது. அவரே ஒப்புக்கொண்டதால் இவர் தண்டனையிலிருந்து தப்பி விட்டார் என்றே கூறலாம். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக பந்தில் எச்சிலை தடவக் கூடாது என்ற விதி அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.