கிரிக்கெட் ஒரு அற்புதமான விளையாட்டு. விளையாட்டின் பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது எண்ணிலடங்கா சாதனைகள் நாளுக்கு நாள் ரெக்கார்ட் செய்யப்பட்டு வருகின்றன. பல சாதனைளை முறியடிக்க முடியாதபடி தோன்றினாலும் கவாஸ்கர் அடித்த 35 சதங்கள், அஃப்ரிடி அடித்த 37 பந்து சதம் போன்ற சாதனைகள் காலம் செல்ல செல்ல ஏதாவது ஒரு மாவீரனால் முறியடிக்கப்பட்டு தான் இருக்கின்றன.
இவற்றையும் தாண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை தான் நிகழும் சாதனகளை பட்டியலிட்டுள்ளோம். அவற்றை தற்போது காண்போம்.
10. டான் ப்ராட்மேன் டெஸ்ட் சராசரி 99.94
சர் டொனாளல்டு ஜார்ஜ ப்ராட்மேன் (1908-1925). கிரிக்கெட் வரலாற்றின் ஆகச்சிறந்த ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் ஆஸ்திரேலிய நாட்டைச சேர்ந்தவர். கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக 124ஆவது வீரராக (கேப்) களம் கண்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பிராட்மேன் 80 ஆட்டங்களில் (இன்னிங்ஸ்) 6996 ரன் குவித்துள்ளார்.
20 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிய வீரர்களின் சராசரி யாரும் 60க்கு மேல் இருந்தது இல்லை. ஆனால், 52 டெஸ்ட் போடிகள் ஆடியுள்ள பிராட்மேனின் சராசரி மலைக்க வைக்கிறது. இவருடைய கிரிக்கெட் வாழக்கையின் சர்வதேச போட்டிகளில் 29 சதங்களையும் 12 இரட்டை சதங்களையும் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிப்பது என்பது தற்போது கூட நினைத்துக்கூட பார்க்க முடியாத கனவாகவே இருக்கிறது.