சென்னை vs டெல்லி; நான்கு பெரும் மாற்றங்களுடன் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை !!

சென்னை vs டெல்லி; நான்கு பெரும் மாற்றங்களுடன் முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை

ஐ.பி.எல் டி.20 தொடரில் டெல்லி சென்னை இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேவு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.

புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாஅம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டூ பிளசிஸ், லுங்கி நிகிடி, கே.எம் ஆசிப் மற்றும் கரண் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளது.

இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணி;

ப்ரிதீவ் ஷா, காலின் முன்ரோ, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கிளன் மேக்ஸ்வெல், விஜய் சங்கர், ராகுல் திவேதியா, லியாம் ப்ளங்கட், அமித் மிஸ்ரா, அவெஸ் கான், டிரண்ட் பவுல்ட்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

சேன் வாட்சன், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, டூ பிளசிஸ், தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, கரண் சர்மா, ஹர்பஜன் சிங், லுங்கி நிகிடி, கே.எல் ஆசிப்.

Mohamed:

This website uses cookies.