டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு: இந்திய அணி மரண மாஸ்! பாதாளத்தில் இருக்கும் பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

There was resistance offered by Dane Peidt and Senuran Muthusamy for the 9th wicket, but then Shami came back into the attack and finished off the job by claiming the final couple of wickets. Photo by Arjun Singh / SPORTZPICS for BCCI

 

2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்தன. இதையடுத்து சாம்பியன்ஷிப் பட்டியலில், இந்தியா மொத்தம் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று இந்த புள்ளியை இந்திய அணி பெற்றுள்ளது.

New Zealand and Sri Lanka take the next two positions with 60 points. Australia and England round off the top 5 with 56 points each.

 

நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி, ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன. தென்னாப்பிரிக்க அணிக்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி என்பதால், இன்னும் புள்ளி கணக்கைத் தொடங்கவில்லை.

 

நிலை அணி போட்டிகளில் வென்றது தோல்வி டிரா புள்ளிகள்
1 இந்தியா 3 3 0 0 160
2 நியூசிலாந்து 2 1 1 0 60
3 இலங்கை 2 1 1 0 60
4 ஆஸ்திரேலியா 5 2 2 1 56
5 இங்கிலாந்து 5 2 2 1 56
6 தென்னாப்பிரிக்கா 1 0 1 0 0
7 மேற்கிந்திய தீவுகள் 2 0 2 0 0
8 வங்காளம் 0 0 0 0 0
9 பாக்கிஸ்தான் 0 0 0 0 0

Sathish Kumar:

This website uses cookies.