ஒருநாள் போட்டியில் விளையாட தகுதி பெற்றது ஓமன் மற்றும் அமெரிக்க அணிகள்
நமிபியாவில் நடக்கும் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 பிரிவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசி., ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்து அளித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நமிபியாவில் உலக கிரிக்கெட் லீக் டிவிசன் 2 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இத்தொடரில் ஓமன், அமெரிக்கா, நமிபியா, ஹாங் காங், கனடா, பப்புவா நியூகினியா என ஆறு அணிகள் பங்கேற்கிறது.
இதில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் 2019-21 ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை லீக் 2 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் ஐசிசி.,யின் ஒருநாள் அந்தஸ்து பெற்ற நேபால், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுடன் இந்த நான்கு அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து பெற்று போட்டிகளில் பங்கேற்கும்.
இதில் தகுதி பெறும் அணிகள் வரும் 2023ல் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். இத்தொடரின் முடிவில் தற்போதுள்ள 16 ஒருநாள் அந்தஸ்து பெற்ற அணிகளுடன் கூடுதலாக 4 அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் ஐசிசி., தரவரிசையில் இடம் பெறும்.
இது இரண்டு வருட கடின உழைப்புக்கான வெற்றி என்று கூறிய அமெரிக்கா பயிற்சியாளர் தஸநாயக்க, இது அமெரிக்க அணியின் இளம் வீரர்களின் மிகப் பெரிய சாதனை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
மறுபுறம் ஓமன்- அமெரிக்கா, கனடா மற்றும் ஹாங்காங்கை தங்களது முதல் மூன்று ஆட்டங்களில் தோற்கடித்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளனர். நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, இறுதியில் பிஎன்ஜியை எதிர்கொள்வார்கள்.
“நாங்கள் ஒருநாள் போட்டியில் சாதித்ததால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான பொறுப்பை சரியாக உணர்ந்து கொண்டனர், கிரிக்கெட்டில் ஹை பிரசர் சூழ்நிலையை கவனமாக கையாண்டனர். நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அணி நிர்வாகம் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்கு மிகவும் நன்றி “என்று ஓமன் அணி பயிற்சியாளர் ஜஷான் கூறினார்.