ரஹானேவை தள்ளிவிட்டு.. உத்தப்பாவை குறைந்த விலைக்கு தூக்கியது ராஜஸ்தான்!

Kolkata Knight Riders batsman Robin Uthappa plays a shot during the 2016 Indian Premier League(IPL) Twenty20 cricket match between Kolkata Knight Riders and Kings XI Punjab at The Eden Gardens Cricket Stadium in Kolkata on May 4, 2016. / GETTYOUT / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் ராபின் உத்தப்பா.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் அணியின் நீண்டகால வீரராக இருந்தவர் அஜின்க்யா ரஹானே. இவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பிடிக்க தவறி வருகிறார்.

மேலும், ஐபிஎல் தொடரில் அதிரடி தேவை அதனையும் இவர் பூர்த்தி செய்ய தவறி வருவதால், அடுத்த ஐபிஎல் சீசனுக்கு டெல்லி அணிக்காக வர்த்தகம் செய்யப்பட்டார். இதனால், ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர் தேவைப்பட்டது.

இதற்காக ஏலத்தில். ராபின் உத்தப்பாவை எடுக்க ராஜஸ்தான் அணி முயற்சித்தது.

கடந்த ஐபிஎல் சீசனில் 6.4 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்ட ராபின் உத்தப்பா சரிவர செயல்படாததால் வெளியேற்றப்பட்டார். இவரின் ஆரம்பவிலை 1.5  கோடியாக இருந்தது.

இவரை எடுக்க ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் முயற்சித்தன.இரண்டு கோடிக்கு மேல் எவரும் எடுக்க முன்வரவில்லை. இறுதியாக, ராஜஸ்தான் 3 கோடிக்கு எடுத்தது.

Prabhu Soundar:

This website uses cookies.