எல்லாமே கனவு மாதிரி தான் இருக்கும்; மகிழ்ச்சியில் வருண் சக்கரவர்த்தி !!

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என நானே நினைக்கவில்லை என தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி துபாயில் இருந்தே ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது.

இந்த தொடருக்கான இந்திய அணியில், தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்களான வருண் சக்கரவர்த்தி, நடராஜன் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருண் சக்கரவர்த்தி மற்றும் நடராஜன் ஆகியோருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில், இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்க்கவே இல்லை என்று வருண் சக்கரவர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வருண் சக்ரவர்த்தில் கூறுகையில் ‘‘பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்ததை தெரிந்து கொண்டேன். நான் திரும்ப திரும்ப பயன்படுத்தும் வார்த்தை, கனவு போன்று உள்ளது என்பதுதான்.

என்னுடைய அடிப்படை இலக்கே அணியில் தொடர்ந்த இடம் பிடித்து, சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதுதான். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக இருந்தது இல்லை. என்மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இதைப்பற்றி சொல்வதற்கு வார்த்த இல்லை’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.