8.4 கோடிக்கு சென்ற தமிழக வீரரை.. கம்மி விலைக்கு வாங்கி அசத்தியது கொல்கத்தா!

கடந்த ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடிக்கு எடுக்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை குறைந்த விலைக்கு தூக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குழு.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. இவர் சுழல்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் நல்ல ஸ்கில் வைத்திருப்பதால், பல அணிகளின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால், பாஞ்சாப் அணியில் ஆடுவதற்கு பெரிதளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆதலால், முழு திறமையை நிரூபிக்க இயலவில்லை. இதன் காரணமாக, இந்த ஆண்டு அந்த அணியால் வெளியேற்றப்பட்டு ஏலத்திற்கு விடப்பட்டார்.

இந்நிலையில், இந்த ஆண்டு இவரின் ஆரம்ப விலையாக 30 லட்சம் வைக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா, பஞ்சாப், மும்பை மற்றும் பெங்களூரு அணிகளிடையே போட்டிகள் நிலவியது.

இவரது ஏலம் 3 கோடியை தாண்டிய பிறகு மற்ற அணிகள் விலகிக்கொள்ள, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இடையே போட்டிகள் நிலவியது. இறுதியாக கொல்கத்தா அணி 4 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது.

இம்முறை, மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையில் ஆட இருப்பதால், அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Prabhu Soundar:

This website uses cookies.