டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட கே எல் ராகுல் 5வது பேட்டிங் யாரை களமிரக்க வேண்டுமென்ற மிகப் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு கடந்த 16ஆம் தேதி சென்றடைந்து, டெஸ்ட் தொடருக்கு முன்பாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வருகிற டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது.
இதுவரை இந்திய அணி 7 முறை தென்னாபிரிக்க மைதானத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. ஆறுமுறை தென்னாப்பிரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் ஒருமுறைகூட தென்னாப்பிரிக்க மைதானத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைபற்றவில்லை. ஆகையால் இம்முறை இந்திய அணிக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது.
இந்த நிலையில் காயம் காரணமாக ரோகித் சர்மா, ஜடேஜா போன்ற சில வீரர்கள் இடம் பெறாததால்,இந்திய அணி எப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர் கொள்ளும் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மா இல்லாததால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கே எல் ராகுல், ஐந்தாவது பேட்டிங் யாரை களமிறக்கவேண்டும் என்ற மிகப் பெரும் குழப்பம் தேர்வாளர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதாக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில்,”எப்பொழுதும் இந்திய அணியின் ஐந்தாவது வீரராக களம் இறங்கும் ரஹானேவை நம்மால் அணியிலிருந்து நீக்க முடியாது, ஏனென்றால் அவர் வெளிநாட்டு மைதானங்களில் மிக சிறந்த முறையில் விளையாடி பலமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.
அதேபோன்று தற்பொழுது நடந்து முடிந்த போட்டிகளில் அதிரடியாக செயல்பட்ட இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரையும் ஆடும் லெவனில் எடுத்தால் இந்திய அணி இன்னும் கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் இவர்களை எந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற குழப்பமும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக 5வது இடத்தில் யாரை விளையாட வைக்க வேண்டும் என்ற சிக்கல் இந்திய அணி தேர்வாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது”, என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.