டெல்லி கிரக்கெட் சங்க தலைவருக்கான தேர்தலில் மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க தேர்தல்- மூத்த பத்திரிகையாளர் ராஜத் ஷர்மா தலைவராக தேர்வு. டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைர் தேர்தலில் பத்திரிகையாளர் ரஜத் சர்மா சுமார் 54.40% வாக்குகள் ஆதரவாக பெற்று வெற்றி!! டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தலைவருக்கான பதவிப் போட்டியில் மூத்த பத்திரிகையாளரான ராஜத் ஷர்மா முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லாலை 517 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ராஜத் ஷர்மா 1531 வாக்குகளும், மதன் லால் 1004 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் ராஜத் ஷர்மா அணி 12 பதவிகளும் வெற்றி வாகை கூடியது.
மேலும், பிசிசிஐ-ன் செயல் தலைவர் சி.கே.கண்ணாவின் மனைவி ஷாஷி, டெல்லி சங்கத்தின் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். டெல்லி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஷேஹ் பன்சாலின், இளைய சகோதரரான ராகேஷ் பன்சாலிடம் போட்டியிட்டு ஷாஷி தோல்வி கண்டார்.
ஷாஷியை சுமார் 278 வாக்குகள் வித்தியாசத்தில் ராகேஷ் வென்றார். ராகேஷுக்கு 1364 வாக்குகளும், ஷாஷிக்கு 1086 வாக்குகளும் கிடைத்தன.
துணைத் தலைவருக்கான போட்டியில் பிசிசிஐயின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணாவின் மனைவி ஷாஷி ராகேஷ் பன்சாலிடம் தோல்வியடைந்தார். ராகேஷ் பன்சால் 1364 வாக்குகளும், ஷாஷி 1086 வாக்குகளும் பெற்றனர். சிகே கண்ணாவின் மனைவி தோல்வியடைந்ததன் மூலம் சுமார் 30 ஆண்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் சிகே கண்ணா செலுத்தி வந்த ஆதிக்கம் முடிவிற்கு வருகிறது.
செயலாருக்கான பதவியில் வினோத் திஹாரா வெற்றி பெற்றார். துணைச் செயலாளர் பதவியில் ராஜன் மன்சண்டா வெற்றி பெற்றார்.
கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக, முன்னாள் விளையாட்டு குழு தலைவர் வினோத் திஹாரா (1374 வாக்குகளில்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மஞ்சித் சிங்கை (998), 376 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கூட்டு செயலாளர் பதவிக்கு முன்னாள் பொருளாளர் ரவீந்தரின் சகோதரர் ராஜன் மன்சண்டா (1402 வாக்குகள்) தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு ஓம் பிரகாஷ் சர்மா (1365), இயக்குநராக, பயிற்சியாளர் சஞ்சய் பார்த்வாஜ், மகளிர் இயக்குநராக ரேணு கண்ணா தேர்வு செய்யப்பட்டனர்.