2010 உலகக்கோப்பை தொடரில் ஆட இன்னும் தனக்கு ஆசை இருப்பதாக இந்தியாவின் உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். உலக்கோப்பை தொடரில் பலர் சாதிக்க காத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ரிஷப் பந்த் நன்றாக ஆடுவார் எனவும் அவர் கடைசியில் இறங்கி அடித்து ஆடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை சேர்ப்பார் எனவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய இளம் விக்கெட் கீப்பர் இந்தத் தொடரில் விக்கெட் கீப்பிங் சாதனைகளுடன் 159 ரன்கள் எடுத்து பேட்டிங் சாதனையும் நிகழ்த்தியுள்ளது, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களிடமிருந்து பலத்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்தில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
ரிஷப் பந்த் ஒரு உண்மையான திறமை, அவர் பந்தை அடிப்பதில் மிகச்சிறந்தவராக இருக்கிறார், ஆட்டம் பற்றிய நுண்ண்றிவுத் திறனும் அவருக்கு உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அவருக்கு பயிற்சியளித்த வகையில் நான் அதிர்ஷ்டம் பெற்றவன் என்றே கருதுகிறேன்.
கீப்பிங்கில் இன்னும் கொஞ்சம் அவர் சரியாக வேண்டும், ஆனால் நிச்சயம் சிறந்த பேட்ஸ்மெனாக அவர் திகழ்வார். வர்ணனையில் அவரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், நிச்சயம் அவர் இன்னொரு ஆடம் கில்கிறிஸ்ட்தான்.
நாம் எப்போதும் தோனி பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம், இந்திய கிரிக்கெட்டில் அவர் தாக்கம் பற்றி பேசுகிறோம், அவர் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடிஉள்ளார், ஆனால் 6 சதங்களைத்தான் அடித்துள்ளார். இந்தச் சிறுவன் ரிஷப் பந்த் நிச்சயம் அவரை விடவும் அதிக சதங்களைக் குவிப்பார்.
ஏற்கெனவே 2 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார், 2 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார், இந்திய அணிக்காக பல வடிவங்களில் அவர் நிறைய போட்டிகளில் ஆடவே போகிறார். 21 வயதுதான் ஆகிறது அதற்குல் 9வது டெஸ்ட் போட்டிக்கு வந்துள்ளார்.
இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.
இதற்கிடையே, சிட்னியில் மழை பெய்துவருவதால் கடைசி நாளான இன்று போட்டி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த டெஸ்ட் டிராவில் முடிய அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் தொடரை கைப்பற்று வது உறுதியாகி விட்டது.
இதற்கு முன், ஆசிய அணிகள் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அதனால் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கக் காத்திருக்கிறது. அதாவது 71 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி அங்கு வெற்றி பெற்று சாதனை படைக்க இருக்கிறது.