வீடியோ; ஹாட்ரிக் சாதனையை தவறவிட்ட விண்டீஸ் வீரர்; கண்ணீர் விட்ட சக வீரர்கள் !!

ஹாட்ரிக் சாதனையை தவறவிட்ட விண்டீஸ் வீரர்; கண்ணீர் விட்ட சக வீரர்கள் 

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பரிணாமம் அடைந்து வரும் கிமார் ரோச் நேற்று இந்திய அணியின்ஸ்டார்பேட்டிங் வரிசைக்கு எதிராக ஒரு அரிய ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த வேண்டியது சில இஞ்ச்கள் இடைவெளியில் கைநழுவிப் போனது.

பாலோ ஆன் கொடுக்காமல் மீண்டும் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் (5) விக்கெட்டை உணவு இடைவேளைக்கு முன் வீழ்த்திய கிமார் ரோச்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பிரமாதமான வேகப்பந்து வீச்சை வெளிப்படுத்திபுதிய உத்தியில் ஆடுவதாகக் கூறப்படும் கே.எல்.ராகுல் மற்றும் பரிசு விக்கெட்டான விராட் கோலி ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைக்கான வாய்ப்பைப் பெற்றார்.

ஆனால் ரஹானே இறங்கி ரோச்சின் பந்தை எட்ஜ் செய்ய பந்து ஸ்டம்புக்கு சில இஞ்ச்கள் இடைவெளியில் சென்றது, பட்டு பவுல்டு ஆகியிருந்தால் ராகுல், கோலி, ரஹானே என்ற பரிசு விக்கெட்டுகளுக்கான ஹாட்ரிக் சாதனையை ரோச் நிகழ்த்தியிருப்பார். ஆனால் முடிவில் ரஹானேயின் அதிர்ஷ்டம் ரோச்சின் துரதிர்ஷ்டமாக முடிந்தது.

இது குறித்து கிமார் ரோச் கூறும்போது, “மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பில் படாமல் அருகில் சென்றது, கொஞ்சம் அதிர்ஷ்டமின்மைதான். ஆனால் எனக்கு என் பந்து வீச்சு குறித்து மகிழ்ச்சியே.

இந்திய பேட்டிங் வரிசை வலுவானது. எனவே இவர்களுக்கு எதிராக ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றதே ஒரு நல்ல உணர்வை என்னிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஹாட்ரிக் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அடுத்த முறை முயற்சி செய்வோம்என்றார் ரோச்.

மே..தீவுகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் உள்ளது, பிட்சில் பவுலர்களுக்கு உதவியிருந்தாலும் பேட்ஸ்மென்கள் செட்டில் ஆகி பாசிட்டிவாக ஆடினால் ரன்கள் எடுக்கலாம். என்று இமாலய இலக்கை விரட்டுவது பற்றி தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.