வீடியோ: எகிறும் விசில் சதத்துடன்… கெத்தாக மைதானத்திற்குள் வந்த தல தோனி… இரவு 9 மணிக்கும் தோனிக்கு குவிந்த கூட்டம்!

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். தோனியின் பயிற்சியை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். விசில் பறக்கும் இந்த வைரல் வீடியோவை கீழே காணலாம்.

2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று வந்த பிறகு, ஒரு சீசன் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலும், மற்றொரு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்திலும், கடைசியாக நடந்த சீசன் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.

சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற அணிகளின் ரசிகர்கள் தங்களது ஊரில் இருக்கும் மைதானத்தில் நடக்கவில்லையே என்கிற ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்நிலையில் இந்த வருட சீசனில் கொரோனா தொற்று வருவதற்கு முன்பு எவ்வாறு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டதோ, அதேபோன்று மீண்டும் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை கேட்டவுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சிகள் உச்சத்திற்கு சென்றனர். ஏனெனில் மகேந்திர சிங் தோனியை மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் பார்க்கலாம் என்கிற ஒரே காரணம்தான்.

கடைசியாக, 2019 ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. சீசன் துவங்குவதற்கு முன்பாக தோனி உட்பட அனைத்து சிஎஸ்கே வீரர்களும் 2 வாரங்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி செய்வர். ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். தோனியை காண்பதற்க்கே ஏராளமானோர் வருவர்.

அதன் பிறகு மூன்று சீசன்கள் சென்னையில் நடைபெறவில்லை இந்த வருத்தம் அதிக அளவில் இருந்தது. இந்த வருடம் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் சிஎஸ்கே வீரர்கள் சிலர் மார்ச் மாதம் முதல் வாரமே இங்கு வந்து பயிற்சி துவங்கி விட்டனர். மேலும் சில வீரர்கள் தங்களது சர்வதேச போட்டிகளை முடித்துவிட்டு சிஎஸ்கே அணியில் இணைந்துவிட்டனர். இரு தினங்களாக பயிற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

இன்று(மார்ச் 27) சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்திற்குள் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சியை காண்பதற்கு கூடிவிட்டனர்.

இன்று மாலை முதலில் மகேந்திர சிங் தோனி உடற்பயிற்சி செய்து வந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் தான் தோனி மைதானத்திற்குள் பயிற்சிக்காக வந்தார். அந்த நேரத்திலும் ரசிகர்கள் கூட்டம் சற்றும் குறையவில்லை. இன்னும் அதிகமாகத்தான் ஆனது.

விசில் சத்தம் பறக்க பறக்க உள்ளே வந்த மகேந்திர சிங் தோனியின் வீடியோவை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. சில நிமிடங்களிலேயே இந்த வீடியோவும் மிகவும் ட்ரெண்டாகியுள்ளது. அதனை கீழே பார்க்கலாம்.

Mohamed:

This website uses cookies.