வீடியோ : ஆஸ்திரேலியாவில் பயிலும் தன் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தவான்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகார் தவான், ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது,  அவரது மகள் அவரைப் பார்த்து  ஆச்சரியத்தில் கத்தும் வீடியோ ஒன்று இந்த வாரம் ட்விட்டர் ட்ரெண்டிங்  இடம் பிடித்துள்ளது.

இன்றைய உலகில்  பணிச்சுமை காரணமாக பலர், தங்களின் குடும்பங்களை விட்டு தள்ளி இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.  அது நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி,  பிரபலங்களாக இருந்தாலும் சரி. குடும்பம் என்று வந்து விட்டால் எல்லாருமே சரிசமம் தான்.

“என் அழகான குழந்தைகளை ஆச்சரியப்படுத்த கிட்டத்தட்ட 15 மணி நேரம் பறந்துவிட்டேன். அவர்களுடைய வியப்புக்கு இது முற்றிலும் ஏற்புடையது. என்னால் இனிமேலும் காத்திருக்க முடியாது. வரவிருக்கும் வாரம் அவர்களுடனே செலவிடப்போகிறேன்” என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

சினிமா பிரபலங்கள்,  கிரிக்கெட் வீரர்கள்,  வெளிநாடுகளில்  தங்கி பணிப்புரிபவர்கள் என எல்லாரும் பல்வேறு காரணங்களால் குடும்பங்களை விட்டு தள்ளி  இருந்து வருகின்றன. அந்த வகையில்,  இந்திய கிரிக்கெட் அணியின்  தொடக்க வீரரான  ஷிகார் தவான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர். இதனால் தனது குடும்பத்தினருடன் மிக குறைந்த நேரத்தையே அவரால் செலவிட முடிகிறது.

இந்த தனிமையை போக்கும் வகையில், சென்ற வாரம் அவர் திடீரென்று அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை  பார்க்க ஆஸ்திரேலியா  புறப்பட்டு சென்றார். ஆனால்,  15 மணி நேர  பயனத்திற்கு பிறகு அவர், தனது மகன் மற்றும் மகள்களை சந்தித்ததை ஒரு வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தனது குழந்தைகளைக் காண ஆஸ்திரேலியா பறந்துள்ள அவர், அங்கு தனது குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்களுக்கு தெரியாமலே, அவர்களை பார்க்க சென்றார். திடீரென தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் காட்சிகளை ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த  வீடியோவில்,  தவான், தனது 5 வயது மகனின் பள்ளிக்கு சர்ப்ரைஸாக சென்று  அவனை சந்தோஷப்படுத்தினார். அதன் பின்பு, தனது மகள்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒளிந்துக் கொண்டு அவர்கள் வரும் நேரத்தில் எதிரில் தோன்றி அவர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்தார்.  குறிப்பாக  தவானின் இளைய மகள் தனது தந்தையைக் கண்டு சந்தோஷத்தில்,, “ஓ மை காட்.., ஓ மை காட்..னு கத்தும் வீடியோ பார்ப்பவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

மூன்றுவித பார்மெட்டிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக முத்திரை பதித்து வருபவர் ஷிகர் தவான். தென்னாப்பிரிக்க தொடர், இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடர் என சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் அவர் அசத்தினார். இதன் காரணமாக, பி.சி.சி.ஐ-யின் சம்பள உயர்வில் வருடத்திற்கு ரூ.7 கோடி பெறும் ஏ+ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தவான் பதிவிட்டிடுருந்த அந்த வீடியோவை பார்த்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும்  தங்களில் குடும்பங்களை மிஸ் செய்வதாக கூறியிருந்தனர். இதுவரை இந்த வீடியோவை எழுபது ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இணையத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

தவான் பதிவிட்ட இந்த வீடியோ இந்த வார ட்விட்டர் ட்ரெண்டிங் வீடியோ லிஸ்டிலும் இடம் பெற்றுள்ளது.

 

Editor:

This website uses cookies.