இலங்கை அணியின் துவக்க வீரர் அவிஸ்கா பெர்னாண்டோவை தரமாக சிராஜ் போல்டாக்கிய வீடியோ கீழே உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிவரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னான்டோ மற்றும் நுவனிது பெர்னாண்டோ இருவரும் களமிறங்கினர். சிராஜ் வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தில், அவிஷ்கா 20 ரன்கள் இருந்தபோது போல்டாகினார்.
அடுத்துவந்த வந்த குஷால் மெண்டீஸ் மற்றும் அறிமுக வீரர் நுவனிது பெர்னால்டோ இருவரும் ஜோடி சேர்நது இரண்டாவது விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னட்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. அப்போது குஷால் மெண்டடீஸ் 34 ரன்களுக்கு குல்தீப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் 47 ரன்கள் அடித்திருந்த தனஞ்செயா டி சில்வா, இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.
நுவனிது பெர்னாண்டோ அறிமுக போட்டியில் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இவரும் 50 ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அசலன்கா 12 ரன்கள் மற்றும் கேப்டன் ஷனக்கா 2 ரன்கள் எடுத்து குல்தீப் வசம் ஆட்டமிழந்தனர். வணிந்து ஹசரங்கா (21) மற்றும் சமிக்கா கருநரத்தினே(17) இருவரும் உம்ரான் மாலிக் பந்தில் அவுட்டாகினர்.
சிறிது நேரம் நிலைத்து ஆடிய இளம் வீரர் துனித் வெல்லாளகே 32 ரன்கள் அடித்து சிராஜ் பந்தில் வெளியேறினார். 11வது வீரராக உள்ளே வந்த லாஹிரு குமரா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் போல்டானார். இறுதியில் 39.4 ஓவர்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை 215 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அவிஸ்கா பெர்னாண்டோவை சிராஜ் போல்டாக்கிய வீடியோ: