ஸ்டெயின் கையிலிருந்து நழுவிய பந்தில் பவுண்டரி விளாசிய ஸ்மித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா தற்போது தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்காவின் மூத்த வீரர் டெல் ஸ்டெயினுக்கும், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் ஸ்மித்க்கும் இடையே சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
போட்டியின் மூன்றாவது ஓவரை ஸ்டெய்ன் வீச அதை ஸ்மித் எதிர்கொண்டார். அப்பொது எதிர்பாரதவிதமாக பந்து ஸ்மித்தின் கையில் இருந்து நழுவியது. அந்த பந்து ஸ்மித்திடம் உருண்டு சென்றது.
ஸ்கோர் செய்ய கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்பார்த்து காத்திருந்த ஸ்மித், இது தான் நேரம் என்று இறங்கி வந்து தூக்கியடிக்க, அது பவுண்டரியானது. ஆனால் அது ‘டெட் பால்’ அன்று அறிவிக்கப்பட்டதால் ரன் ஏதும் கொடுக்கவில்லை. முடிவில் ஸ்மித் 32 பந்துகளில் 45 ரன்கள் விளாச ஆஸ்திரேலிய அணி 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் ஆஸ்டன் ஆகர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, தென்னாப்ரிக்க அணி 14.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 5 விக்கெட்களை வீழ்த்திய ஆஸ்திரேலியா வீரர் ஆஸ்டன் ஆகர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க தரப்பில் நீண்ட இடைவேளைக்குப் பின் அணிக்குத் திரும்பிய ஸ்டெயின் மற்றும் ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா 14.3 ஓவர்களில் 89 ரன்களுக்குச் சுருண்டு 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இது டி20 போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும் ரன்களின் அடிப்படையில் ஆஸி. அணிக்கு 2ஆவது மிகப்பெரிய வெற்றியாகும்.
அபாரமாக பந்துவீசிய ஆஷ்டன் ஆகர் 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உடன் கூடிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மற்றும் 5 விக்கெட்டுகள் சாய்த்த 2ஆவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.