பார்மில் இருந்த விராட் கோலியை க்ளீன் போல்டு செய்துள்ளார் சுனில் நரேன். விக்கெட்டின் வீடியோ கீழே உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு குர்பாஸ் மற்றும் வெங்கடேஸ் ஐயர் இருவரும் ஓபனிங் செய்தனர். போட்டியின் நான்காவது ஓவரை வீசிய டேவிட் வில்லே, அதே ஓவரில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் மந்தீப் சிங் இருவரின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்தில் போல்டு செய்து அசத்தினார்.
அடுத்து பவுலிங் செய்த மைக்கேல் பிரேஸ்வெல் நித்திஷ் ரானா(1) விக்கெட்டை தூக்கி கொல்கத்தா அணிக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். குர்பாஸ் அபாரமாக விளையாடி 57(44) ரன்கள் அடித்து அவுட்டானார். ரஸ்ஸல்(0) அடுத்த பந்தில் வெளியேறினார்.
89/5 என்கிற இக்கட்டான நேரத்தில் உள்ளே வந்த சர்துல் தாக்கூர் வெளுத்து வாங்கி பவுண்டரி சிக்ஸர்களாக விளாசினார். வெறும் 20 பந்துகளில் அரைசதம் அடித்து ஆர்சிபி அணியை கதிகலங்க வைத்தார். இவர் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து அவுட்டானார்.ரிங்கு சிங் 46 ரன்கள் அடித்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது கொல்கத்தா.
மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணிக்கு டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி நன்றாக துவங்கினர். முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் அடித்திருத்தபோது, விராட் கோலியின் விக்கெட்டை தூக்கினார் சுனில் நரேன். இந்த இடத்தில் இருந்து ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.
வரிசையாக விக்கெட்டுகளை இழக்கத் துவங்கினர். 96 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.
விராட் கோலியை சுனில் நரேன் க்ளீன் போல்டு செய்த வீடியோ:
தட்டுத்தடுமாறி ஆர்சிபி அணி 100 ரன்களை கடந்துவிட்டது. வருண் சக்ரவர்த்தி, சூயேஷ் சர்மா, சுனில் நரேன் ஆகியோரின் அபார பந்துவீச்சில் கொல்கத்தா அணி வெற்றியை பெற்றுள்ளது.