இந்திய அணிக்கு மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, 2021ஆம் ஆண்டு அந்த பொறுப்பில் மொத்தமாக விலகினார். பிசிசிஐ பல்வேறு அழுத்தம் கொடுத்ததாகவும் அதன்பின்னரே விராட் கோலி விலகியதாகவும் கூறப்பட்டது.
மேலும், விராட் கோலி விலகியதற்கு காரணம் அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி என்பதும் உலகறிந்த விஷயம். முன்னுக்குப்பின் முரணாக பேசி விராட் கோலி-க்கு பலவகையில் அழுத்தம் கொடுத்தது ஆதாரங்களுடன் வெளிவந்தது.
அப்போது கங்குலி இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். பின்னர் அப்போதைய தலைமை தேர்வு கொள்ளவும் அதிகாரியாக இருந்த சேத்தன் சர்மாவிடம் சமீபத்தில் ரகசிய கேமரா வைத்து செய்யப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷனில் அவரே உலறிவிட்டார். விராட் கோலியை கங்குலி வேண்டுமென்றே வெளியேற்றினார் என்று. அந்த சமயத்தில் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் கங்குலி மீது பல வகைகளில் கடும் கோபமாக இருந்த விராட் கோலி அதை எங்கேயும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆலோசகராக பணியாற்றி வருகிறார் கங்குலி.
சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியின்போது, விராட் கோலி ஒரு கேட்சை எடுத்து கங்குலியை பார்த்தபடியே நடந்து சென்றார். போட்டியின் இறுதியில் ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. தொடர்ச்சியாக பெறும் 5ஆவது தோல்வியாகும்.
பின்னர் போட்டி முடிந்த பிறகு ஆர்சிபி அணியினர் டெல்லி அணியினருடன் கைகுலுக்கினர். அப்போது கங்குலியுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார் விராட் கோலி. இதன் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விராட் கோலி இன்னும் கங்குலி மீது இருக்கும் கோபத்தை மறக்கவில்லை என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வீடியோ: