பெங்கால் அணியில் இணைகிறார் ஐ.பி.எல் ஏலத்தில் விலை போகாத இளம் வீரர்
ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் விலை போகாத இளம் வீரர் இஷான் போரல், விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் தேர்வாகியுள்ளார்.
2017 – 2018ம் ஆண்டிற்கான விஜய் ஹசரா தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மனோஜ் திவாரியே மீண்டும் கேப்டனாக பெங்கால் அணியை வழிநடத்த உள்ளார்.
இதில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்தில் யாரும் விலை கொடுத்து வாங்க முன்வராத 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரலும் விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் தேர்வாகியுள்ளார்.
கடந்த இரு தினங்களாக நடைபெற்ற ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலத்தில், இவரின் சக வீரர்களான சுப்மன் கில் உள்ளிட்ட சில வீரர்கள் ஏலம் போன நிலையில், இஷான் போராலை மட்டும் எந்த அணியும் அவரது அடிப்படை விலை கூட கொடுத்து வாங்க முன் வரவில்லை.
விலை போகாதே இவரே நியூசிலாந்து இன்று நடைபெற்ற 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 6 ஓவர்கள் வீசி அதில் 17 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்தே இவர் விஜய் ஹசாரே தொடருக்கான பெங்கால் அணியில் தேர்வாகியுள்ளார்.
பெங்கால் அணி ;
மனோஜ் திவாரி (கேப்டன்), சுதீப் சாட்டர்ஜி, அபிமன்யூ ஈஸ்வரன், விரிட்டிக் சாட்டர்ஜி, ஸ்ரீ வாட் கோஸ்வாமி, கனிஷ் செத், அசோக் டிண்டா, சயான் கோஸ், முகேஷ் குமார், ஆமிர் கனி, பிரதிப்டா பிராமனிக், சுமண்டா குப்தா, அபிஷேக் ராமன், இஷான் போரெல்.