மும்பை அணியில் இடம்பெற்றார் இளம் இந்திய அணியின் கேப்டன்
19 வயதுக்குட்பட்டோருக்கான இளம் இந்திய அணியின் கேப்டனான ப்ரிதீவ் ஷா, எதிர்வரும் விஜய் ஹசாரா தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடரில் அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களது அணியை அறிவித்து வருகின்றன. இதில் தற்போது நடைபெற்ற 19 வயதுகுட்பட்டோருக்கான உலக்கக்கோப்பையில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ள இளம் இந்திய அணியின் கேப்டன் ப்ரிதீவ் ஷா, மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட மும்பை அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. ஆனால் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவரின் ஆட்டத்தை பார்த்த பிறகு மும்பை கிரிக்கெட் வாரியம் இவரை அணியில் சேர்த்துள்ளது.
2017 – 18ம் ஆண்டிற்கான ரஞ்சி தொடரில் 3 சதம், மற்றும் இரண்டு அரைசதத்துடன் மொத்தம் 537 ரன்கள் குவித்த இவர், நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கி கெத்து காட்டி வருகிறார். கடந்த 4 போட்டிகளில் மட்டும் இவர் 232 ரன்கள் குவித்துள்ளார்.
இவரின் சிறப்பான ஆட்டத்தின் மூலமே சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 1.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணி;
ஆதித்யா தரே (கெப்டன்), தவால் குல்கர்னே, சுர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாத், அகில் ஹெர்வேத்கர், ஜெய் பிஸ்தா, சிவம் டூப், சாஸான்க் சிங், எக்நாத் கெர்கர், ஆகாஷ் பார்கர், துருமில் மக்தர், ராய்ஸ்டன் தியாஸ், சம்ஸ் முலானி, சுபம் ரஞானே, சிவம் மல்ஹோத்ரா, ப்ரிதீவ் ஷா.