உடைந்து போன தாடை!! அதிரடி ஆட்டம்!! உன்முக்ட் சந்த் அபாரம்!!

மாநில அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் டெல்லி – உத்தர பிரதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய உத்தர பிரதேசம் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 55 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது உன்முக்த் சந்தின் தாடை உடைந்தது. என்றாலும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறாமல் கட்டுப்போட்டுக்கொண்டு தைரியத்துடன் விளையாடி 125 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 116 ரன்கள் குவித்தார்.

2002-ம் ஆண்டு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடும்போது ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்டில் கும்ப்ளேயின் தாடை உடைந்தது. அதற்கு கட்டுப்போட்டுக் கொண்டு சிறப்பாக பந்து வீசி லாராவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அனில் கும்ப்ளேயின் தைரியத்தை எல்லோரும் பாராட்டினார்கள். தற்போது உன்முக்த் சந்தும் கும்ப்ளேயை நினைவுபடுத்தியுள்ளார்.

Editor:

This website uses cookies.