விஜய் ஹசாரே ஒருநாள் தொடர்: உத்தரபிரதேச அணியின் கேப்டன் ஆகிறார் சுரேஷ் ரெய்னா

NOTTINGHAM, ENGLAND - JULY 11: Suresh Raina of India throws during a nets session at Trent Bridge on July 11, 2018 in Nottingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் உத்தரபிரதேச அணியின் கேப்டன் ஆகிறார் சுரேஷ் ரெய்னா

தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வரும் சுரேஷ் ரெய்னா அவரது உள்ளூர் அணியான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதட

உத்திரபிரதேச அணி :

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அக்ஷ்திப் நாத், ஷிம்ம் சவுதரி, உமாங் சர்மா, ரிங்க்கு சிங், பிரியம் கார்க், சம்தா சிங், உபேந்திரா யாதவ், அபிஷேக் கோஸ்வாமி, சவுராப் குமார், சிவா சிங், அங்கிட் ராஜ்பூட், ஷிம்மா மாவி, அமித் மிஸ்ரா, யாஷ் தலால், மொஸ்ஸி கான் .

இத்தொடரில் ஆடும் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். யோ யோ டெஸ்டில் தேறாததால், ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடினார். அதிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரெய்னா தலைமையிலான இந்த அணியில், ரிங்கு சிங், அன்கிட் ராஜ்பூட் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19–ந் தேதி முதல் அக்டோபர் 11–ந் தேதி வரை நடக்கிறது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19–ந் தேதி முதல் அக்டோபர் 11–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:–

விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், கவுசிக் காந்தி, அனிருத் சீதாராம், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.விக்னேஷ், டி.நடராஜன், ரஹில் ஷா, சாய் கிஷோர், சி.வி.வருண், ‌ஷருண்குமார், ஷாருக்கான், எம்.முகமது.

விஜய் ஹசாரே தொடரில் ஆடும் மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காததால், இவர்கள் இருவரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஆடுகின்றனர். 

அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து காம்பீர் விலகினார். இந்நிலையில், இம்முறை மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Vignesh G:

This website uses cookies.