விஜய் ஹசாரே கோப்பைக்கான் டெல்லி அணி அறிவிப்பு: கேப்டனாக கம்பிர் நியமனம்!

விஜய் ஹசாராஎ கோப்பைக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கவுதம் கம்பிர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அணி:

கவுதம் கம்பிர்(கே), ஹரித் சிங், ஹிட்டன் தாலால், லலித் யாதவ், மனன் ஷர்மா, பவன் நேகி, நவடிப் சைனி, குல்வந்த் கெஜோரிலியா, கௌவரவ் குமார், சிமரிஜீத் சிங், பன்ஷூ விஜயன், துருவ் ஷோரி, உன்முக்ட் சந்த், ரிஷாப் பன்ட்(கீ), நிதீஷ் ராணா

ஸ்டான்ட்-பை:

மிலிந்த் குமார், பிரஷாந்த் பண்டாரி, சாரதா ரஞ்சன், வருண் சூட், ஆகாஷ் சூடான்

அரசியலில் குதிக்க அடி எடுத்து வைத்து சில மக்கள் வேலைகளை செய்தும் வருகிறார் அவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் பல்வேறு சமூக உதவிகளை செய்து வருகிறார். சமூக பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது டுவிட்டரில் தனது கருத்தை பதிவிடுகிறார். இந்த நிலையில் டெல்லியில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ‘ஹிஜ்ரா ஹப்பா’ எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கு கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். இதனை ஏற்று கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில் கம்பீர் துப்பட்டா அணிந்து பெண் போன்ற அலங்காரத்துடன் தோன்றி திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். திருநங்கைகளுடன் அவர் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கம்பீரின் இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம். திருநங்கைகளான அபினா அஹிர், சிம்ரன் சாஹிக் ஆகியோர் எனக்கு ராக்கி கயிறு கட்டி சகோதரராக ஏற்றுக்கொண்டனர். நானும் அவர்களை சகோதரிகளாக பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். நீங்களும் அவர்களை சகோதரிகளாக ஏற்பீர்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்.,

விஜய் ஹசாரே டிராபி போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே. சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தொடரில் பங்கேற்ற ரஹானே பத்து இன்னிங்ஸில் 257 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 25.70. அங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி, வரும் 19 ஆம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் பரோடாவை எதிர்கொள்கிறது. இதற்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது. ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டன். இளம் வீரர் பிருத்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார்.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரஹானேவுக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதால் மும்பை அணிக்காக விளையாடுகின்றனர்.

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.