மஹாராஷ்டிரா அணிக்கு கை கொடுக்கும் வாய்ப்பை இழக்கிறார் கேதர் ஜாதவ்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் கேதர் ஜாதவ் விளையாடி வரும் விஜய் ஹசாரே தொடருக்கான மஹாராஷ்டிரா அணியில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் லீக் சுற்றுக்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், நாக் அவுட் சுற்றுகள் நாளையில் இருந்து துவங்குகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான மஹாராஷ்டிரா அணியில் இடம்பெற்றிருந்த ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ், நாக் அவுட் சுற்றுக்களிலும் மஹாராஷ்டிரா அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரில் பங்கேற் ஜாதவ் தென் ஆப்ரிக்கா சென்றுவிட்டதால் லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. மேலும் இந்த தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடவில்லை.
இன்னும் காயத்தில் இருந்து கேதர் ஜாதவ் முழுமையாக குணமடைவில்லை என்பதால் அவர் இந்திய திரும்பிய பின் சிறிது நாட்கள் ஓய்வு எடுப்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக மஹாராஷ்டிரா அணி நாக் அவுட் சுற்றுக்களில் கேதர் ஜாதவ் போன்ற அனுபவ வீரரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று ராஹானே உள்ளிட்டவர்களும் தென் ஆப்ரிக்காவில் இருப்பதால் தங்களது அணிக்காக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரேயஸ் ஐயர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.
அடுத்ததாக நாளை நடைபெற இருக்கும் இந்த தொடரின் காலிறுதி போட்டியில் மஹாராஷ்டிரா அணி மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
மும்பை அணியில் ஸ்ரேயஸ் ஐயர், ப்ர்தீவி ஷா போன்ற இளம் நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளதால், நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
விஜய் ஹசாரே தொடருக்கான மஹாராஷ்டிரா அணி;
ராகுல் த்ரிபதி, அன்கிட் பாவ்னே, சத்யஜித் பாச்சாவ், பிரதீப் தாதே, நிகிட் துமல், ருத்ராஜ் கைக்வாட், திவ்யாங் ஹிமான்கர், அதர்வா கேல், பிரசாந்த் கோர், ஷிகர்காண்ட் முண்டே, நிகில் நாயக், ஜெய் பாண்டே, அனுபம் சன்கலேச, நவ்சாத் சேக், முர்தஷா துருன்கவாலா, விஜய்