விஜய் சங்கர் விலகல் : பவுன்சரால் காயம்

முத்தரப்பு தொடர் :

இந்தியா ஏ மற்றும் தென்னப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடயேயான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித்தொடர் தென்னாப்பிரிக்கவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இண்திய அணியின் பேட்டிங்கின் போது 26* ரன்களில் ஆடிக்ககொண்டிருந்த விஜய் சங்கர் மீது வேகப்பந்து வீச்சாளார் வீசிய பவுன்சர் பந்து அவரது தோல்பட்டையில் மிக பலமாக தாக்கியது. பொருக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்த விஜய் சங்கர் அப்படியே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் மருத்துவவனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் காயத்தால் மிகுந்த வலியால் வேதனைப்பட்டுள்ளார்.

அவரால் அந்த பவுன்சரில் இருந்து விலக இயலவில்லை. பந்து அவரை தாக்கியவுடன் அவரால் மேலும் மைதானத்தில் இருந்து விளையாட்டை தொடரவும் இயலவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கர். அவரால் மேலும் அணியில் இருந்து விளையாட முடியாத நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. தொடரில் இருந்தும் விலகியுள்ளார் விஜய் சங்கர். முன்னதாக தென்னாப்பிரிக்க ஏ அணியில் விளையாடிக்கொண்டிருந்த அக்சர் படேல் இந்திய அணியில் ஜடேஜாவிற்க்கு மாற்றாக அழைக்கப்பட்டார். இதனால் அகசர் படேலுக்கு மாற்றாக அழைக்கப்பட்டவர் தான் விஜய் சங்கர்.

தற்போது அவருக் காயம் அடைந்திருப்பதால் அவருக்கு மாற்று இந்திய கிரிக்கெட் கட்டப்பாட்டு வாரியம் அறிவிக்கவில்லை. ஆனால், முன்னதாக அணியில் இருக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்னப்பா கௌதம் மாற்றாக செயல் படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்கவில் நடந்த முத்த்ரப்பு தொடரில் வென்றாலும் டெஸ்ட் தொடரில் அவ்வளவாக பலம் இல்லாத அணி போல் தான் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 235 ரன் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ஏ அணி. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி 346 ரன்கள் அடித்தது. பின்னார் ஆடிய கருன் நாயர் தலைமையிளான் இந்திய ஏ அணி வெரும் 120 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இரண்டாவது இன்னின்சை ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி 220 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த்தது. இந்திய அணிக்கு இமாலய இலக்காக 447 ரன்கள் வைத்தது. மீண்டும் சொதப்பிய இந்திய ஏ அணி 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படு தோல்வி அடைந்தது.

அடுத்த போட்டியில் இத்தோல்வியில் இருந்து மீண்டு வர இந்திய ஏ அணி மிகக் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் சங்கர் அணியில் இல்லாதது இந்திய ஏ அணிக்கு பெருத்த பின்னடைவே ஆகும்.

முன்னதாக முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் அபாரமாக ஆடிய விஜய் சங்கர் 72 ரன்கள் அடித்து வெற்றியயை உறுதி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார் விஜய். இரண்டு போட்டியில் ஆடியுள்ள அவர் ஓவருக்கு 4 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இவரது இல்லாமை இந்திய ஏ அணியை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Editor:

This website uses cookies.