தினேஷ் கார்த்திக், அஸ்வின் இருவருக்கும் டாட்டா சொல்லி.. விஜய் சங்கரை கவுரவித்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம்!

தினேஷ் கார்த்திக் வழிநடத்திய விஜய் ஹசாரே, சையத் முஸ்தாக் அலி தொடரில் தமிழகம் இரண்டாம் இடமே பெற்றதால், ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் முதல் தர கிரிக்கெட் தொடரின் முன்னணி தொடராக இருந்து வருவது ரஞ்சி டிராபி. இதன் 86வது சீசன் வரும் டிசம்பர் 9ம் தேதி துவங்குகிறது. இதில் தமிழகம், குஜராத், மும்பை உள்ளிட்ட 38 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடரின் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி முதலிரண்டு போட்டிகளில் முறையே கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம் அணிகளை எதிர்கொள்கிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான தமிழக அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் முறையாக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் மூத்த வீரர்களான அஷ்வின் மற்றும் விஜய் சங்கர்,  தினேஷ் கார்த்திக் இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு எவ்வித பொறுப்பும் அளிக்கப்படவில்லை.

பாபா அபராஜித் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதால், முதல் போட்டியில் போட்டியில் பங்கேற்க்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பைக்கான தமிழக அணி வீரர்கள் பட்டியல்:

விஜய் சங்கர் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், அஷ்வின், சாய் கிஷோர், நடராஜன், விக்னேஷ், அபிஷேக், முருகன் அஷ்வின், சித்தார்த், ஷாருக் கான், கே. முகுந்த், வாஷிங்டன் சுந்தர். 

Prabhu Soundar:

This website uses cookies.