ஒருநாள் போட்டிகளில் சச்சின்,லாராவை விட சிறந்தவர் கோலி என பதிவிட்டுள்ளார் மைக்கேல் வாகன்!!
ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வாழ்வா சாவா என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விராட் கோலியின் மிகப்பிரமாதமான சதத்தையும் மீறி 313 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் தங்கள் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
314 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல்லிளித்தது. விராட் கோலி மட்டுமே ‘நான் தான் கிங்’ என்றவாறு ஆடி 95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நின்று கொண்டிருந்தார், ஆனால் கடைசியில் ஆடம் ஸாம்ப்பா பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இன்றும் கோலி, தோனி, ஜாதவ் விக்கெட்டுகளை ஸாம்ப்பா கைப்பற்றி 70 ரன்கள் கொடுத்தாலும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி எந்தப் போட்டியாக இருந்தாலும் விக்கெட்டுகளே போட்டியை வெல்லும் என்பதை நிரூபித்தார். கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் மிகச்சிக்கனமாக வீசியதோடு தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், முன்னதாக சதம் கண்ட கவாஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ரன்களைப் பெரிய அளவில் குவித்தால் இந்த இந்தியப் பேட்டிங் பல்லிளிக்கும் என்று நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம், அது இன்று உண்மையானது, அதே போல் பெரிய இலக்குகளை இப்போதைய தோனி விரட்ட முடியாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் அதுவும் நிரூபணமானது. அதே போல் நல்ல பவுலிங்குக்கு எதிராக அம்பாதி ராயுடுவின் பேட்டிங் திறமைகள் கேள்விக்குறியே என்றும் கூறினோம் அதுவும் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பிரமாதமாக ஆடி வரும் விராட் கோலி நடப்பு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 2 சதங்களை எடுத்தார். இது குறித்து ஷேன் வார்ன் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலி பற்றி குறிப்பிட்டபோது, “விராட் கோலி பேட்டிங் மற்றும் அவரது கிரிக்கெட்டைப் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு போதும் அவர் விட்டுவிடுவதில்லை, அணி வெற்றி பெற முடியும் என்ற அயராத நம்பிக்கை, அணுகுமுறை என் இதயத்தை வருடுகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவரிடம் யாரோ விராட் கோலி, என்ன சச்சின் டெண்டுல்கர், லாரா ஆகியோரை விட சிறந்த பேட்ஸ்மேனா என்று கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது, அதனைக் குறிப்பிட்ட இன்னொரு ட்வீட்டில் ஷேன் வார்ன் பதிவிட்டிருப்பதாவது:
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மன் என்று நான் கருதுகிறேனா என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதைப்பற்றி நான் சிந்தித்து பிறகு உங்களிடம் வருகிறேன் என்று பதிலளித்தேன். டான் பிராட்மேனுக்குப் பிறகு என்னைப் பொறுத்த அளவில் விவ் ரிச்சர்ட்ஸ்தான் சிறந்த பேட்ஸ்மன்.
ஆனால் நவீன கிரிக்கெட் காலத்தில் ம்ம்ம்ம்… கடினம்தான்… என்று பதிவிட்டுள்ளார்.