வெளியானது தரவரிசை பட்டியல்… கோலியின் நம்பர்-1′ இடம் காலி? பும்ரா நிலைமை?

ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. அதில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி ‘நம்பர்–1’ இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் பும்ரா 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 928 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Virat Kohli (captain) of India celebrates his Hundred runs during day 2 of the 2nd Test match between India and Bangladesh held at the Eden Gardens Stadium, Kolkata on the 23rd November 2019.
(This test match is the first Day / Night Test match that India have taken part in)
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

தரவரிசையில் மற்ற இந்திய வீரர்களான புஜாரா 791 புள்ளிகளுடனும், அஜின்கியா ரகானே 759 புள்ளிகளுடனும் முறையே 4வது, 6வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் பெர்த்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் பெரிதளவில்ஆடாததால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் 2வது இடத்திலேயே உள்ளார்.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 143 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் அடித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் 786 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

வேகப்பந்துவீச்சுக்கான தரவரிசையில், காயம் காரணமாக ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 794 புள்ளிகளுக்கு குறைந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெர்த் டெஸ்டில் 7 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்தின் நீல் வாக்னர் 834 புள்ளிகளுக்கு உயர்ந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ 780 புள்ளிகள் பெற்று 10வது இடத்தை பெற்றார்.

இப்போட்டியில் 9 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 806 புள்ளிகளுடன் 5வது இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் நீடிக்கிறார்.

ஆல்–ரவுண்டர்களுக்கான தரவரிசையில் விண்டீசின் ஜேசன் ஹோல்டர் (473), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (406), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (381) மூவரும் முறையே முதல் மூன்று இடங்களில் இருக்கின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.