கோப்பையை நடராஜனின் கையில் கொடுத்து அழகு பார்த்த கேப்டன் விராட் கோலி ! புகழ்பாடும் நெட்டிசன்கள் !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் மிகப்பெரிய காரணமாக அமைந்தார்.

தனது முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளும் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விராட் கோலியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளராக மாறினார். இந்நிலையில் 3வது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் இரண்டாவது போட்டியைப் போலவே பந்துவீச்சை தேர்வு செய்தது.

வழக்கம்போல் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடினார் 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும். அதன் பின் அந்த அணியின் மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 54 ரன்கள் விளாச இறுதியாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க நடராஜன் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கிளன் மேக்ஸ்வெல் விக்கெட்டை சிதற அடித்து தூக்கினார். இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்து இருக்கும்.

இதே போல் இந்த தொடர் முழுவதும் முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி விராட் கோலியின் முழு நம்பிக்கையையும் பெற்றார் நடராஜன். இந்நிலையில் இன்றைய போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி வழக்கம்போல் தொடக்கம் முதலே சொதப்பியது. கே.எல் ராகுல் டக் அவுட்  ஆகி வெளியேறினார்.

ஷிகர் தவான் 28 ரன்கள் அடிக்க தனியாளாக விராட் கோலி விளையாடி 61 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

எப்படிப் பார்த்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இந்த போட்டி முடிந்தவுடன் தொடருக்கான கோப்பை இந்திய  கேப்டனாக விராட் கோலியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் விராட் கோலி இதற்கு மிகவும் தகுதியானவர் என்று நடராஜனிடம் கொடுத்தார்.

முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகி விராட் கோலியின் நம்பிக்கை பெற்ற நடராஜன் கோப்பையை அவரது கையில் இருந்து வாங்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் புகழ் பாடி வருகின்றனர். குறிப்பாக இவ்வளவு பெருமை வாய்ந்த இந்திய கேப்டன் விராட் கோலியிடமிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.