ஆசியாவிலேயே மிகவும் ஹாட்டாக இருக்கும் பிரபலங்களில் விராட் கோலியி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பல பரிமாணங்களை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டது. அதாவது சர்ச்சைகள் அவருக்கு இருக்கும் சொத்து எவ்வளவு பிரபலமாக உள்ளார் என பல்வேறு நிகழ்வுகளை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மூன்றாவது இடத்திலும் ஹிருத்திக் ரோஷன் 5வது இடத்திலும் அக்ஷய்குமார் 9ஆவது இடத்திலும் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
2018-ம் ஆண்டில் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் Forbes டாப்-100 பட்டியலில் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் பட்டியலை Forbes இதழ் வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ. 253.25 கோடி வருவாய் பெற்று ஒட்டுமொத்த பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடம் பெற்றுள்ளார்.
முழுமையான பட்டியல் இங்கே:
ரேங்க் | பெயர் |
1 | பிடிஎஸ் |
2 | விவியன் டிசே |
3 | ஷாஹித் கபூர் |
4 | ஜெய்ன் மாலிக் |
5 | ஹ்ரிதிக் ரோஷன் |
6 | மொஹ்சின் கான் |
7 | குர்மித் சௌத்ரி |
8 | அலி ஜாஃபர் |
9 | அக்ஷய் குமார் |
10 | விராத் கோலி |
இரண்டாம் இடத்தில், ரூ. 228.09 கோடி வருவாய் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். மூன்றாம் இடத்தில், ரூ. 185 கோடி உடன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உள்ளார். டாப்-10 பட்டியலில் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் ‘கிங்’ கோலி, முதல் இடத்தில் உள்ளார். இவரின் கடந்த ஆண்டு வருமானம் ரூ. 100.72 கோடி. நடப்பாண்டு வருமானம் ரூ. 228.09 கோடி. நூறு சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 130 கோடிக்கு மேல், கோலியின் வருமானம் உயர்ந்துள்ளதுகோலிக்கு அடுத்து இருப்பவர் ‘தல’ தோனி. 37 வயதான இவர், கடந்த ஆண்டு வருமானத்தை விட சுமார் ரூ. 40 கோடி அதிகம் சம்பாதித்துள்ளார். தோனியின் நடப்பாண்டு வருமானம் ரூ. 101.77 கோடியாக உள்ளது.
இந்த வரிசையில், 3-வது இடத்தில் இருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கடந்த ஆண்டை விட இரண்டரைக் கோடி ரூபாய் குறைவாக சம்பாதித்த இவரின் வருமானம் ரூ. 80 கோடியாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில், நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளார். இவரின் நடப்பாண்டு வருமானம் ரூ. 36.5 கோடி.
அடுத்தடுத்த இடங்களில், கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், சுரேஷ் ரெய்னா ஆகியோர் உள்ளனர். அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில், 10-வது இடத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இருக்கிறார்.