கோஹ்லி, அனுஷ்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்; திட்டு வாங்கியவர் திடீர் வழக்கு
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடுரோட்டில் குப்பையை போட்டதால் விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவிடம் திட்டு வாங்கிய அர்ஹான் சிங் என்னும் நபர், தன்னை திட்டிய அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியான அனுஷ்கா சர்மாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் செல்லும் வழியில் பயணித்த மற்றொரு காரில் இருந்த நபர் ஒருவர் காரில் இருந்தே கொண்டே குப்பையை நடுரோட்டில் வீசியதால் ஆத்திரம் அடைந்த விராட் கோஹ்லியின் மனைவி அவரை ரோட்டில் வைத்தே கண்டபடி திட்டினார். அனுஷ்கா திட்டியதை வீடியோ எடுத்த அவரது கணவர் விராட் கோஹ்லி அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்து திட்டு வாங்கியவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திவிட்டார்.
விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனுஷ்கா – கோஹ்லி ஜோடிக்கு பாராட்டு பெற்றுத்தந்தது.
இதனால் மனமுடைந்துள்ள அர்ஹான் சிங் என்னும் அந்த நபர் தன்னை திட்டிய அனுஷ்கா சர்மாவும் அவரது கணவர் விராட் கோஹ்லியும் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதன் பேரில் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.