தங்களது இடத்தை இழந்த விராட் கோலி, கே.எல் ராகுல்… டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது !!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் கே எல் ராகுல் டி20 ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒரு இடம் சரிந்து பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

கிரிக்கெட் தொடரில் மிக சிறந்த முறையில் விளையாடும் வீரர்கள் அவர்களின் சிறப்பான விளையாட்டின் காரணமாக மதிப்பெண் அளித்து வரிசைப் படுத்தபபடுவர். குறிப்பாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஐசிசி டாப் பேட்ஸ்மேன் லிஸ்ட் என்றும், பந்து வீச்சில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களை டாப் பௌலிங் லிஸ்ட் என்றும், சிறந்த ஆல்ரவுண்டரை டாப் ஆல்ரவுண்டர் லிஸ்ட் என்றும் ஐசிசி வகைப்படுத்தி புள்ளி பட்டியலை வெளியிடும்.

இந்நிலையில் ஐசிசி டி20 தொடரின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக இந்திய அணியின் வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை குறிப்பாக டி20 ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்த விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலிலும் 10 இடங்களுக்குள் உள்ளனர், ஆனால் விராட்கோலி 4வது இடத்தில் இருந்து 5-வது இடத்தில் 725 பாய்ன்ட் பெற்று ஒரு இடம் பின்தங்கியுள்ளார், அதேபோன்று இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் கேஎல் ராகுல் 684 பாயிண்ட் பெற்று 8வது இடத்தில் உள்ளார்.இந்த இரு வீரர்களை தவிர்த்து இந்திய அணியில் எந்த ஒரு வீரரும் டி20 தொடர்க்கான ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடத்தை பிடிக்கவில்லை.

மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 820 பாயிண்ட் பெற்று டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார் இவர் முதலிடத்தில் இருக்கும் டேவிட் மாலனின்(831) இடத்தை பிடிப்பதற்கு இன்னும் 11 பாயிண்ட் மட்டுமே உள்ளது, இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தை பிடிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

பாபர் அசாமை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து சிறந்த ஆல்ரவுண்டர்க்காண ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபியை மீண்டும் பின்னுக்கு தள்ளி பங்களாதேஷ் அணியின் நட்சத்திர நாயகன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.

Mohamed:

This website uses cookies.