கிரிக்கெட் உலகில் புதிய மைல்கல்லை எட்டினார் தளபதி கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 18,000 ரன்களை பூர்த்தி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் 89 ரன்களும், அலெய்ஸ்டர் குக் 71 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் மூன்று ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் பின் வந்த கோஹ்லி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு வருவது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 18,000 ரன்களை பூர்த்தி செய்தார்.
இது தவிர சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகத்தில் 18,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதே போல் அதிவேகமாக 18,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியல் இங்கே.
சச்சின் டெண்டுல்கர்; (412 இன்னிங்ஸ்)
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 412 இன்னிங்ஸில் 18,000 ரன்களை கடந்திருப்பதன் மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.