எப்பவுமே நான் மட்டுமே ஆடுனா எப்படிடா… தரமான ஆரம்பம் கொடுத்த விராட் கோலி.. கோட்டைவிட்ட மிடில் ஆர்டர்… 174 ரன்களில் ஆர்சிபி அணியை சுருட்டியது டெல்லி!

ஆரம்பத்தில் விராட் கோலி அரைசதம் அடித்து அசத்த, பின்னர் வந்து வீரர்கள் சொதப்பியதால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் அடித்தது. 175 ரன்கள் அடித்து இந்த சீசனின் முதல் வெற்றியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் டெல்லி அணியின் கேப்டன் வார்னர்.

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் களமிறங்கினர். விராட் கோலி மீண்டும் ஒருமுறை வந்த உடனேயே அடிக்க ஆரம்பித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். மறுபக்கம் டு பிளசிஸ் விராட் கோலி-க்கு ஸ்ட்ரைக் கொடுத்துவந்தார்.

துரதிஷ்டவசமாக, டு பிளசிஸ் 22 ரன்களுக்கு மிச்சல் மார்ஸ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த மஹிபால் விராட் கோலி உடன்  பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒரு முனையில் விராட் கோலி தன்னுடைய அதிரடியால் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக 34ஆவது பந்தில் அவுட் ஆகினார்.

நன்றாக விளையாடி வந்த மஹிபால் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். 12.3 ஓவர்களுக்கு 117 ரன்கள் அடித்து மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆர்சிபி அணி, அதுவரை நல்ல நிலையில் தான் காணப்பட்டது.

14ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேல்(6) விக்கெட்டை எடுத்தார் அக்ஸர் பட்டேல். தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்தபோது, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்தலிலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

117/3ல் இருந்த ஆர்சிபி அணிக்கு மீண்டும் ஒருமுறை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோதப்பியதால் 15 ஓவர்கள் முடிவில் 132/6 என தடுமாறியது. ஏழாவது விக்கெட்டிற்கு அனுஜ் ராவத் மற்றும் சபாஷ் அகமது இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடிக்க ஆனியன் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எட்டியது ஆர்சிபி.

 

பெங்களூரு மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதனைப் பயன்படுத்திக்கொண்டு 175 ரன்கள் இலக்கை எட்டி இந்த சீசனின் முதல் வெற்றியை பெறுமா? என்பதை பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.